MARC காட்சி

Back
சீர்காழி பிரமபுரீஸ்வரர் திருக்கோயில்
245 : _ _ |a சீர்காழி பிரமபுரீஸ்வரர் திருக்கோயில் -
246 : _ _ |a பிரமபுரம், வேணுபுரம், புகலி, தோணிபுரம், புறவம், பூந்தராய், வெங்குரு, சிரபுரம், சண்பை, ஸ்ரீகாளி, கழுமலம், வளநகர், கொச்சை வயம்
520 : _ _ |a இத்தலத்தில் உள்ள திருஞானசம்பந்தர் அவதாரம் செய்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் அவர்களால் நினைவாலயமாகப் போற்றப்பட்டு வருகின்றது. மூவர் பாடல் பெற்ற தலம். தருமையாதீனத் திருக்கோயில். மாணிக்கவாசகர், பூந்துருத்திகாடநம்பி, பட்டினத்தடிகள் நம்பியாண்டார் நம்பிகள், அருணகிரிநாதர், தருமையாதீனத்துப் பத்தாவது குருமூர்த்தி சிவஞானதேசிகர், திருவாவடுதுறை ஆதீனத்து எட்டாவது குருமூர்த்தி மாசிலாமணி தேசிகர், அருணாசலக்கவிராயர் முதலியோர் சீகாழியின் சிறப்பையும் ஞானசம்பந்தரின் பெருமையையும் பல படப் புகழ்ந்து பாடியுள்ளனர். சீகாழி    அருணாசலக்    கவிராயர் தலபுராணம் பாடியுள்ளார். ‘திருக்கழுமல மும்மணிக்கோவை’ பட்டினத்தடிகளால் பாடப்பட்டது. ஞானசம்பந்தர் மீது மும்மணிக் கோவை, திருச்சண்பை விருத்தம், திருத்தொகை திருவந்தாதி, திருவுலாமாலை, திருக்கலம்பகம் முதலிய பிரபந்தங்களை நம்பியாண்டார் நம்பிகள் பாடியுள்ளார். காழிக்குமரவேளைச் சிறப்பித்துப் பாடியுள்ள திருப்புகழும் உள்ளது. இத்தலத்தில் வாழ்ந்த மகான்களில் 1. உலகத் தீமைகளைப் பார்க்க விரும்பாது மச்சைவிட்டு இறங்காமல் மேலேயே தங்கி வாழ்ந்து, மறைஞான சம்பந்தரிடம் அருளுபதேசம் பெற்ற மச்சுச்செட்டியார் 2.‘சிவப்பிரகாசம்’ நூலுக்குக் கொளுச் சூத்திரம் எழுதியவரும் காழிப் பழுதை கட்டிச் சிற்றம்பலநாடிப் பண்டாரம் என்னும் பெயர் உடையவருமான சீகாழிச் சிற்றம்பல நாடிகள் 3.‘ஒழிவில் ஒடுக்கம்’ நூலைப்பாடிய சீகாழிகண்ணுடைய வள்ளலார் 4. ‘காழிப்புராணம்’, ‘காழிப்பள்ளு’, ‘காழிஅந்தாதி’, இராமநாடகக் கீர்த்தனை’ முதலிய நூல்களைப்    பாடிய சீகாழி அருணாசலக்கவிராயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.
653 : _ _ |a கோயில், சைவம், சிவபெருமான், தேவாரப்பாடல் பெற்ற தலம், பிரம்மபுரீசுவரர் கோயில், சீர்காழி, நாகப்பட்டினம், தோணியப்பர், திருஞானசம்பந்தர், பிரமபுரம், வேணுபுரம், புகலி, தோணிபுரம், புறவம், பூந்தராய், வெங்குரு, சிரபுரம், சண்பை, ஸ்ரீகாளி, கழுமலம், வளநகர், கொச்சை வயம், சட்டைநாதர்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர் அவதாரத்தலம்.
914 : _ _ |a 11.23797235
915 : _ _ |a 79.73951201
916 : _ _ |a பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்
918 : _ _ |a பெரியநாயகி, திருநிலைநாயகி
922 : _ _ |a பாரிசாதம்
923 : _ _ |a பிரம தீர்த்தம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a இத்திருக்கோயிலில் திருஞானசம்பந்தருக்கு நித்திய வழிபாடும் தை அமாவாசை, வைகாசி மூலம், ஐப்பசி சதயம் ஆகிய நாள்களில் சிறப்பு வழிபாடுகளும்; மலை மேல் உள்ள பெரிய நாயகருக்கு நாடொறும் நான்கு கால பூஜைகளும் நடைபெறுகின்றன. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூரம், நவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
927 : _ _ |a இரண்டாம், மூன்றாம் குலோத்துங்கன், வீரராசேந்திரன், இராசகேசரிவர்மன், கிருஷ்ண தேவராயர் ஆகிய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவற்றின் இறைவன் பெயர் 1. திருக்கழுமலம் உடையார் 2. திருத்தோணிபுரம் உடையார் எனவும்; ஞானசம்பந்தரின் பெயர் ஆளுடைய பிள்ளையார் என்றும் குறிக்கப்பெறுகின்றது. தலத்தின் பெயரை ‘ராஜராஜவள நாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம்’ என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இப்பெருமானுக்குச் சட்டையப்பர், சட்டைநாதர், வடுகநாதர் எனப்பல பெயர்களுண்டு. சட்டைநாதரைத் தரிசித்துக் கீழிறங்கி வலமாக வரும்போது மூங்கில்கன்றும் அதன்பக்கத்தில் பாரிசாதமும் உள்ளதைக் காணலாம். அடுத்துத் தேவேந்திரலிங்கம், நவக்கிரகம், பிரமபுரீஸ்வரலிங்கம் உள்ளன. பிரமதீர்த்தக் குளம் முதன்மை வாய்ந்த தீர்த்தமாகும். முன்னால் வளைவு போடப்பட்டு, அதன் இருபுறங்களிலும், பிரமன் வழிபடுவது, தந்தையாகிய சிவபாத இருதயருக்கு ஞானசம்பந்தர் தோணியப்பரைச் சுட்டிக் காட்டுவது, அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளிப்பது முதலியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளன. பிராகாரத்தில் திருஞானசம்பந்தர் மூலச்சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம் – மனநிறைவான தரிசனம். இச்சந்நிதி உள்மண்டபத்தில் சலவைக் கற்களில் திருஞானசம்பந்தர் பதிகமும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றியுள்ள சீகாழிக் கோவைப் பாடல்களும் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.
930 : _ _ |a  இத்திருத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமையானது.  மகாவிஷ்ணு மாவலிபால் குறள் வடிவாகச் சென்று  மூன்றடி மண் யாசித்து விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்து மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்துப் பாதாள  உலகிற்குச் செலுத்தினார்.  அதனால் அவர் அகங்காரங் கொண்டு உலகு நடுங்கத்திரி வாராயினார்.   இஃதறிந்த வடுகநாதர் தமது  திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்துப் பூமியில் விழ்த்தினார்.  இலக்குமி மாங்கலியப் பிச்சை வேண்டியவாறே  இறைவனருள் செய்ய, விஷ்ணு உயிர் பெற்று எழுந்து வணங்கினார்.  அவர்தம் தோலையும், எலும்பையும் அணிந்து கொள்ள  வேண்டுமென்று விண்ணப்பிக்க இறைவனும் எலும்பைக் கதையாகக் கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்து அருள்செய்தார்.   அதுமுதல் பெருமான் தண்டபாணி, சட்டை நாதர், வடுக நாதர், ஆபதுத்தாரணர் எனப் பல திருநாமங்களோடு விளங்கி வருகிறார். ஆரியவர்த்தத்தை ஆண்டு வந்த காலவித்து என்னும் வேந்தன் புத்திரப் பேறின்மையினால் வருந்தி உரோமச முனிவரைக் கண்டு  தன் கவலையைத் தெரிவித்தான்.  முனிவரும் கயிலையின் சிகரத்தை தரிசித்தால் கவலை நீங்கும் என்று கூறினார்.  எவ்வாறு  தரிசிக்க முடியும் என்று கவலையுற்ற வேந்தனை நாட்டுக்கு அனுப்பிவிட்டுக் கயிலாயம் சென்ற முனிவர் தவஞ்செய்தார்.   இறைவன் முனிவர் முன்தோன்றி வேண்டுவது யாதென, முனிவரும் தென்னாட்டு மக்கள் தரிசிக்க வேண்டி இம்மலைச்சிகரம்  ஒன்றைத் தென்திசையில் தோற்றுவித்து அதில் உமாதேவியுடன் வீற்றிருந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். அதற்குக்  கயிலாயபதி ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் போர் நடக்கும் பொழுது இது நிறைவேறும் என்று அருள்புரிந்தார்.  பின்னொருநாள்  ஆதிசேடனுக்கும், வாயுவுக்கும் தம்முள் யார் வலியர் என்பது பற்றிப் போர் நிகழ்ந்தது.  ஆதிசேடன் தனது ஒரு தலையை  மெதுவாகத் தூக்கினான்.  உடனே மலைச்சிகரம் பெயர்ந்து ஒரு பெருங்கிளையும் பல சிருகிளைகளுமாக 11 கிளைகள் விழுந்தன.   பெருங்கிளையான சிகரம் இறைவன் அருளால் 20 பறைவகளால் இங்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டது.  காலவித்து என்னும் அரசனும் தரிசித்தான்.  பின்னர் அம்மலை மறைந்து நிற்க, மலைவந்து தங்கிய இடத்தில் சுதையால் 20 பறைவகள் தாங்கியது  போலவே கட்டுமலை ஒன்றைக்கட்டுவித்து அரசனும் தன் நகர் சேர்ந்தான். திருஞானசம்பந்தப் பிளையார் சிவபாத ஹிருதயர் என்னும் பிராணோத்தமருக்குத் திருக்குமாரராகச் சற்புத்திர மார்க்கத்தை  விளக்கவும் சைவசமயம் யாங்கணும் பரவவும் அவதரித்தார்.  மூன்றாண்டு நிறம்பாத பிள்ளையாரைக் கரையில் இருக்கச் செய்து  நீராடிக் கொண்டிருந்தார்.  அப்போது பிளையார் பூர்வ உணர்ச்சிமேலிட பார்வதி தேவியாரையும் பரமேசுவரரையும் நினைத்து  அம்மே அப்பா என்று அழுதருள பெருமானும் அம்மையை நோக்கித் திருமுலைப்பால் கொடுத்தருள்க என்றருளினார்.  அவ்வாறே அம்மையாரும் பொற்கிண்ணத்தில் பாலைப்பெய்து ஞானத்தைக் குலைத்து ஊட்டியருளினார்.  அதையுண்ட பிள்ளையாரும்  ஞானசம்பந்தம் பெற்றுத் திருஞானசம்பந்தர் ஆயினார்.  ஸ்நானம் முடித்து வந்த தந்தையார் பிள்ளையாரை நோக்கி உனக்குப்  “பல்கொடுத்தார் யார்?” என்று கோபித்துக் கேட்க பிள்ளையாரும் இடபாரூடராய் அம்மையப்பராய் எழுந்தருளி வந்த  சுட்டிக்காட்டித் “தோடுடைய செவியன்” என்னும் திருப்பதிகம் பாடியருளினார்.  பின்னர் பிள்ளையார் சிவ சமயம் எங்கும் நிலை  பெறுமாறு பற்பல செயற்கருஞ் செயல்களைச் செய்து தலங்கள் தோறும் சென்று அரிய தேவாரப்பதிகங்களை அருளி இப்பதிக்கு  அருகிலுள்ள திருநல்லூர் பெருமண(ஆச்சாள்புர)த்தில் தமது பதினாறாவது வயதில் வைகாசி மூலத்தில் தமக்கு நிகழ்ந்த  திருமணத்தின் பொருட்டு வந்த அன்பர் கூட்டத்துடன் இறைவன் அருட்சோதியிற் கலந்தருளினார்.
932 : _ _ |a கிழக்கு ராஜகோபுரம் பிரதானவாயில். இடப்பால் அலுவலகம் உள்ளது. விசாலமான உள்ளிடம். உள்வாயிலில் வெளிப்புறம் ‘தோடுடைய’ பதிகம் சலவைக்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம். விபூதிப்பட்டையும், பட்டும் சார்த்தித் தரிசிக்கும் போது கம்பீரமான தோற்றம் மனத்திற்கு நிறைவாக இருக்கிறது. மூலவர் - பிரமபுரீஸ்வரர். பக்கத்தில் திருஞானசம்பந்தர் சந்நிதி உற்சவத்திருமேனியுடன் (கையில் பாற்கிண்ணம் ஏந்தி நின்ற நிலையில்) உள்ளது. கருவறை வெளிச்சுவரில் ஞானசம்பந்தர் வாழ்க்கைச் சிற்பங்கள் ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. பிரகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது. சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாகவுள்ளது. மலைப்படிகளேறிக் கட்டு மலையின் மீது சென்றால், ஞானப்பாலைத்தந்தருளிய தோணியப்பரைத் தரிசிக்கலாம். இச்சந்நிதி கயிலாய அமைப்பிலுள்ளது. இங்குள்ள சாளரத்தில் நின்று பார்த்தால் (சற்றுச்சாய்வாக) பிரமதீர்த்தக் குளம் தெரிகிறது. ‘பிரமாபுரம் மேவியபெம்மான் இவன்’ என்று சம்பந்தர் சுட்டிக்காட்டிய அமைப்பு நினைவு கூரத்தக்கது. அதற்கும் மேலேறிச் சென்றால் சட்டையப்பரைத் தரிசிக்கலாம். சட்டைநாதர் பெயரிலேயே தேவஸ்தானம் விளங்குகிறது. இம் மூர்த்திகரம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இச்சந்நிதி உயரத்தில் உள்ளது. குறுகலான வழியே நுழைந்து, மரப்படிகளேறித் தரிசிக்க வேண்டும்.
933 : _ _ |a தருமபுர ஆதினம்
934 : _ _ |a திருஞானசம்பந்தர் அவதார இல்லம், அட்ட பைவரவர் கோயில், ஆபத்து காத்த விநாயகர் கோயில்
935 : _ _ |a சிதம்பரம் முதலிய பல ஊர்களிலிருந்தும்    பேருந்து வசதிகள் உள்ளன. சிதம்பரத்தையடுத்துள்ள தலம்-புகைவண்டி நிலையம்.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a சீர்காழி
938 : _ _ |a சீர்காழி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a சீர்காழி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000202
barcode : TVA_TEM_000202
book category : சைவம்
cover :
Primary File :

cg102v057.mp4

TVA_TEM_000202/TVA_TEM_000202_சீர்காழி_பிரம்மபுரீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000202/TVA_TEM_000202_சீர்காழி_பிரம்மபுரீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000202/TVA_TEM_000202_சீர்காழி_பிரம்மபுரீசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000202/TVA_TEM_000202_சீர்காழி_பிரம்மபுரீசுவரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_000202/TVA_TEM_000202_சீர்காழி_பிரம்மபுரீசுவரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_000202/TVA_TEM_000202_சீர்காழி_பிரம்மபுரீசுவரர்-கோயில்-0006.jpg

TVA_TEM_000202/TVA_TEM_000202_சீர்காழி_பிரம்மபுரீசுவரர்-கோயில்-0007.jpg